பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ெசகர்கள் மொழி பெயர்ப்பு நூல்களை விரும்பிப் படிப்பதில்லை என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது.

நூலகங்களில், துப்பறியும் நவீனங்கள் சரித்திர நாவல்கள் மற்றும் கதைச் சுவை நிறைந்த நாவல்கள் தான் வாசகர்களால் மிகுதியும் எடுத்து படிக்கப்படுகின்றன. பல நாவல்களுக்கு டிமாண்ட்’ அதிகம்; அவை எப்போதும் சுற்றிக் கொண்டேயிருக்கும். ஒருவருக்குத் தேவை ஏற்பட்டு, திடீரென்று நினைத்துக் கொண்டு நூலகத்துக்குப் போய் அந்த நாவல் வேண்டும் என்று கேட்டால், அது அவருக்கு கிடைத்து விடாது; அப்புறம் பல வாரங்கள் வரை கூட அவருக்கு அது கிடைக்க வாய்ப்பு இருக்காது. அது தனக்குத் தேவை என்று வாசகர்கள் பலர் முன்னதாகவே தங்கள் பெயரைப் பதிவு செய்து வைத்திருப்பார்கள். அவ்வரிசைப்படி தான் அந்த நாவல் வழங்கப்படும். இந்த அளவுக்கு மொழி பெயர்ப்புப் புத்தகங்கள் - சிறந்த நாவல்கள் என்று பெயர் பெற்றவை கூட - வெளியே போவதில்லை.