பக்கம்:வாடா மல்லி.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 365


“நீதான் எங்கள மன்னிக்கணும். ஒரு தடவ ஒன்ன டில்லியில் காருக்குள்ள பார்த்ததாய் பத்தாவது வகுப்புக் காரி பாத்திமா சொன்னாள். டில்லியில டி.வி.யிலயும் பார்த்ததா சொன்னாள். நான் நம்பலை.”

“அவள் எங்கே இருக்காள் குருவக்கா?.”

“அஞ்சு வருஷத்துக்கு முன்னால பம்பாய் போனாள். ஒன்ன மாதிரி நல்லா ஆனாளோ, இல்ல எங்களமாதிரி பீச்சு பீச்சா திரிஞ்சுட்டு அலையுறாளோ...அக்காளால இப்ப முடியலைடி. நம்மளுல ஒன்ன மாதிரி ஆயிரத்துல ஒன்றுதானே கரையேறுது. அந்த வகையில எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். இப்படிச் சந்தோஷப் பட்டது, ஒரு தடவ எங்கம்மா இங்க வந்து என்ன பார்த்துவிட்டுப் போனபோதுதான் இப்போ என் மகள் வந்திருக்காள்.”

மேகலை, குருவக்காவின் தலையை நிமிர்த்தினாள். நகத்தைக் கடித்துக்கொண்டிருந்த தோழிகளைப் பார்க்கா மலே, அவள் நெற்றியில் முத்தமிட்டாள். முகம் மேடுபள்ள மாகிவிட்டது. பழைய அழகு கலைந்து போனது. புருவங்களுக்குக் கீழே கருப்புத் திட்டுகள். அசத்தலான கண்கள் இருந்த இடத்தில், வெறும் குழிகள். முர்கே மாதா பழைய குருவக்கா எங்கே போனாள்... உடம்பைக் குலுக்காமலே பேசுவாளே. இப்போது அந்தப் பேச்சின் வேகம் தாங்காமல், உடம்பு தானாய் குலுங்குதே. அதே அந்த சிரட்டைப் பொட்டு முகம். எப்படி சில்லு சில்லாய்ப் போனது.

குருவக்கா மேகலையை வழிநடத்தினாள். கூடவே, அந்த டில்லிக்காரிகளும் போனார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு அலிப்பட்டாளம். நீலிமா அங்குமிங்குமாய் பொறுக்கிய தமிழ் வார்த்தைகளை அவர்கள் காதுகளில் போட்டுப் போட்டுக் காட்டினாள். “என்னடி.ஒம்மாள. கபிரீச்சிங்களா..”

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/387&oldid=1251118" இலிருந்து மீள்விக்கப்பட்டது