பக்கம்:வாடா மல்லி.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 சு. சமுத்திரம்


“ஆம்புள கெடைக்காம இப்போ பொட்டைக்கு பொட்டையே கட்டிப் பிடிக்கீங்களா?”

எல்லோரும் எதிர்த்திசையைப் பார்த்தார்கள். ஏழெட்டு போலீஸ்காரர்கள், அவர்கள் மத்தியில் இடுப்பில் துப்பாக்கி வைத்த இன்ஸ்பெக்டரோ சப் இன்ஸ் பெக்டரோ. எஞ்சியவர்கள் கையில், லத்திக் கம்புகள் ‘மிஞ்சின. அவர்களின் கனமான பூட்ஸ் கால்கள் ஆங்காங்கே பள்ளங்களை ஏற்படுத்தின. துப்பாக்கி அதிகாரி, லத்திக்கம்பை அங்குமிங்குமாய் ஆட்டியபடியே குருவக்காவைப் பார்த்துக் கேட்டார்.

“இந்தப் பொட்டைங்கள எப்போடா இறக்குமதி செய்தே. இந்தத் தொழிலுக்கு ஆளு பத்தலையா?”

குருவக்காவும், பச்சையம்மாவும் பதறிப்போய் எழுந்தார்கள். “உட்காருங்க சார். உட்காருங்க சார்.” என்று தங்களது நாற்காலிகளை அவர்கள் பக்கமாய் இழுத்துப் போட்டார்கள். துப்பாக்கிக்காரர் மேகலையை ஏற இறங்கப் பார்த்தார். அவள், தன்னையோ, தனது துப்பாக்கியையோ அங்கீகரிக்காததில் ஒரு ஏமாற்றம், கர்வபங்கம்.

“அந்தப் பொட்டப்பயல் எழுந்திருக்க மாட்டானோ! எதுவும் எக்ஸ்ட்ராவா மொளச்சிருக்கோ... டேய், பொட்டை! வாடா இங்கே!”

மேகலை, நிதானமாக எழுந்தாள். அவளைப் பிடித்திழுத்த டில்லிக்காரிகளை உதறித் தள்ளிவிட்டு, அவர் முன்னால் ஓடிப்போய் நின்றாள். இடுப்பில் கை வைத்த படியே ஒரு சந்தேகம் கேட்டாள்.

“நீங்க போலீஸ்தானே! இந்த காக்கி யூனிபாரம் உங்கதுதானே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/390&oldid=1251122" இலிருந்து மீள்விக்கப்பட்டது