பக்கம்:வாடா மல்லி.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 369


துப்பாக்கிக்காரர் கோபத்தை அடக்கிக்கொண்டு, மேகலையைப் பேசவிட்டார். சரிந்து போகப்போன லத்திக் கம்புகளை கையமர்த்தினார்.

‘எதுக்குக் கேட்டேமுன்னால், போலீஸ்காரங்களை ‘உங்கள் நண்பன்னு சொல்லுவாங்க. ஒரு குடிமகனையோ, மகளையோ ரெண்டுமே இல்லாமப்போன எங்களையோ மரியாதை போட்டு பேசணுமுன்னு சட்டம் சொல்லாமச் சொல்லுது. அதனால்தான் கேட்டேன்! நீங்க போலீஸ்காரங்களா தெரியலை; ஒருவேளை போலீஸ்ல இருந்து காக்கி யூனிபாரத்தை திருடுன பொறுக்கிப் பசங்களாய்...”

மேகலையால் மேற்கொண்டு பேச முடியவில்லை. கீழே விழுந்து கிடந்தாள். வாயில் ரத்தம். துப்பாக்கிக் காரரின் பூட்ஸ்கால் இன்னும் காலைத் தூக்கிய நிலையிலேயே தாண்டவத்திற்குத் தயாராகியபோது, அவரது வாய் வார்த்தைகளால் சுட்டன.

“என்னடா நெனச்சே பொட்டப்பயலே. வெள்ளைக் கார்ல கஞ்சா கடத்தினா விட்டுடுவோமா. ஒவ்வொரு பொட்ட வீடா சோதனை போடுங்கப்பா. எத்தனை கிலோடா கொண்டு வந்தே... ஒன்ன பாலோ செய்துக்கிட்டுத்தான் இருக்கோம்: காலையிலேயே வந்து இந்த பச்சையம்மாகிட்டே காதுல மந்திரம் போடுறியா.

சப்-இன்ஸ்பெக்டர் ஓங்கிய காலை, மேகலையின் முகத்துக்கெதிராய் கொண்டு போகப்போனபோது

‘டேய் போலீஸ் பொறுக்கி... ஒன் வீட்லயும் பொட்டை விழும்டா, கூசாம பொய் சொல்றியே. இதுக்கே நீயும் ஒரு பொட்டையாப் போவே... எங்கே என் ராசாத்தி மேல கால் வை பார்க்கலாம்.”

சப்-இன்ஸ்பெக்டர் அசந்தார். தன்னை ஒரு பொட்டப்பயல்-அதுவும் பச்சையம்மா, அப்படிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/391&oldid=1251123" இலிருந்து மீள்விக்கப்பட்டது