பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அழுக்கெலாம் உறையும் செம்மைப் பாவாடை அரையில் தொங்கும் ; வழுவழுப் பான தோளே மறைத்திடும் பச்சைச் சட்டை : கழுத்தினில் பிள்ளேக் காகக் கட்டிய ஏனே தன்னில் விழியினைக் கசக்கி எட்டி வேடிக்கை பார்க்கும் பிள்ளே ! கண்ணினேச் சுழற்றி வெட்டிக் கையினே முறுக்கிச் சுற்றிப் பெண்புருப் போல ஒடிப் பின்வந்து நிமிர்ந்து நின்று. பண்ணிசை சேர வாயில் வந்ததைப் பாடிப் பாடி உண்ணவோர் கவளத் திற்கும் ஒவ்வொரு வீடும் நிற்பாள் ! குழவிகள் இடுப்பில் கட்டும் கொக்குக்கால் குருவிக் கால்கள் ; பழந்துணி தைக்க ஊசி, பால்மணி, கரிப்பல், ஈச்சம் பழக்காய்கள் கோர்த்த தேபோல் பவழங்கள், மாட்டின் பிச்சு, அழகுமான் கொழுப்பின் உண்டை, அவள்விற்பாள் கூவிக் கூவி! குறலச்சை என்பார் மண்ணில் கொள்கைக்கு வாழா மாந்தர் ! குறவரோ தம்மை வாட்டும் வயிற்றுக்குக் கூச்சல் செய்வார் ;