பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறவர் வீட்டினுள் இருக்க உள்ளம் விரும்பிட வில்லை ; சிற்றுார்ப் பாட்டையில், குளிர்மை தோய்ந்த பசுமர நிழலில் சென்றேன் ; மேட்டினில் அங்கும் இங்கும் சம்புவால் வேய்ந்த கூரை காட்டிற்றுக் குறவர் இன்பக் களஞ்சியக் குடிசை தன்னே ! 'இச்சிறு குச்சி வீட்டை விருப்பம்போல் எடுத்துச் சென்று குச்சியை நாட்டி யாங்கே குடித்தனம் செய்யும் விந்தை, மச்சடை இல்லம், வானே மருவிடு மாடம் வாழும் இச்சக மாந்தர்க் கேதோ 9. என்றதே என்றன் உள்ளம். இயற்கையின் எழிலேப் போல இருந்தனர் ஆனும் பெண்ணும் ; முயற்கண்ணி தோளில் மாட்டி, முன்மார்பில் கரித்தோல் போர்த்து வயிற்றினில் சிறுதோல் பையை வரிந்தனன் குறவர் காளே, ! கயற்கண்ணுள் சிரித்தாள்! ஆ1ஆ! களாக்காடு பழுத்த தாங்கே !