பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் தயக்கம் ? ஆணிறந்தால் பெண்மற்ருேர் ஆளன் அடைவதற்கு வீண்வாதம் பேசி விதிர்விதிர்ப்பார் - நாணமின்றிப் பெண்ணிறக்க வேறுமணம் பெற்றிடுதல் நீதியென்பார் ; எண்ணில் இவரெதற்(கு) ஈடு ? உன்சோட்டுப் பெண்களெலாம் உற்ற துணையோடே இன்புற்று வாழுகின்ருர் இவ்வுலகில் - என்கிளியே ! ஆணுக் கொருதிே ஆக்கியதா லுன்வாழ்வை வீளுய்க் கழிப்பதுவோ ? விள் ! 'உன்தகப்பன் தங்கை உடன்பிறந்தான் வாழ்க்கையில் இன்னிணையில் சேர்ந்தே இருக்கின்ருர் - உன்மனது கைம்பெண் வேண்டாம் களிப்பெனுமோ சற்றுகின நம்முரிமை நாடுவது நாம். - மஞ்சள் குளித்து மலர்சூடிப் பொட்டிட்டுக் கஞ்சவிழி திட்டிக் களிப்படைய - வஞ்சி துடிதுடித்தா லாமோ? துணிந்தெடுங் இன்றே மடமை இனமழிக்கும் வாள். எதிர்ப்பட்டால் குற்றமும் ஏழை விதவைக் கதிர்பட்டால் குற்ற்மும் காண்பார் - மிதித்துலகை மீன்போ லெதிர்த்தேறு மீளும் வகையிதுதான்! ஏன் தயக்கம் ? இன்னே எழு !