பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர்களே திருடர் ! படுக்கையில் கிடந்தேன் ; பனிக்காற்றுக் கதவின் இடுக்கால் புகுந்தெனை எழுப்பிற்று ; விழித்தேன் ; மாடியில் முல்லை மலர்சிரித் தழைத்தது ; பாடிற்று வண்டு : பாட்டையைத் துழவி ஓடின விழிகள் ; உயர்ந்தது ஞாயிறு ; செத்தி எலியொன்று தெருவில் கிடந்தது ! கத்தின காக்கைகள் ; கொத்தின. அதனே ! என்றன் எண்ணக் குதிரைகள் எங்கோ சென்றன ; திரும்பின ; தெருவிடை நின்றன ! உணவைத் திருடிய எலியை வீட்டார் பிணமாய்ச் செய்தனர் ; பேதைமை 1 பேதைமை ! அணையாப் பசிநோய் யார்க்கும் பொதுவாம் ! உணர்வும் பொதுவாம் : ஊக்கமும் பொதுவாம் ! சாக்கா டொன்றே இவையெலாம் தவிர்ப்பது. - மற்ருேர் உழைப்பை மடக்கிப் பெருக்கித் - தமதென் றெவர்க்கும் சாற்றித் திரிவோர் திருட்டை விளேப்பவர் இவர்களே திருடர், ! இவர்களேப் போன்ற எலிகளும் உளவே ! பூனை இல் வீட்டில் பொருளே இரவில் சிறிதே திருடும் வீட்டுச் சிறு எலி ! நாட்டைத் திருடி நலிவைப் பெருக்கி உயர்வு தாழ்வை உண்டாக்கித் திரியும் நாட்டெலியல்லவோ நாம்கொல்ல வேண்டும் ! ஆவன் செய்வதறியாது வீட்டெலி கொல்லல் வீண் வீண் 1 வினே' 10. 15 20