பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணி செவியேங்க, மனமேங்க, தீந்தமிழும் ஏங்க, திருநாட்டார் உளமேங்க, கண்ணேங்க இந்தப் புவிமறந்தாய் ; உயிர்நீத்தாய்; ஆலுைம் உன்றன் பொற்குவையாம் அழகுதமிழ்க் கவிதைமணிக் கொத்தைச் செவிமறவா உளம்மறவா; அழியாத சொத்தாம் ! சிந்தைக்கு நல்லுணவு கவிதையன்றி உண்டோ? கவிமணியே நற்றமிழோய் ! திருநாகர் கோவில் கண்மணியே ! உன்பாடல் ஒருநாளும் சாகா ! 1.

  • பாட்டிற்கிங் கொருபுலவன் பாரதியே ? என்ற பண்ணெழுப்பி வைத்த்வாய் மண்ணுக்குள் அந்தோ! கேட்டாலும் கினைத்தாலும் நெஞ்சுடைந்து போகும் ! கிடைக்காத பெருஞ்செல்வம் உமர்கயாம் பாடல் ! திட்டாத ஒவியத்தைச் சொல்லடுக்கு மையால் தீட்டியின்ருய் ; விருந்தளித்தாய் ! இனியெங்கே போவோம்.? நாட்டிற்கோ உன் மறைவு பெரும் இழப்பு ; காஞ்சில் கவிமணியே ! உன்பாடல் ஒருநாளும் சாகா ! 2

சாக்காடு மறுமலர்ச்சி என்ருலும் கன்னித் தமிழ்மகனே ! உன்பிரிவு உளத்துக்கோர் ஈட்டி ! பூக்காட்டுத் தமிழ்க்காவில் உள்ளநறுந் தேனேச் சுவைகூட்டிப் புதுமுறையில் மக்கட்குத் தந்தாய் ! வேக்காட்டை யார்தணிப்பார் ? சீர்திருத்தப் புத்தன் விளக்கத்தை இனியிங்கே யார்உரைக்கல் போவார்? பாக்காட்டுக் கவிமணியே தமிழர்பெருஞ் சொத்தே ! . பரந்தமன விரிவுடையோய் ! சாகாதுன் பாட்டே 3