பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பானே உலேயேற்றிப் பால்சொரிந்து திக்கொளுத்தப் பொங்கலோ பொங்கல் பெரும்பொங்கல் வாழியவே! சிங்கத் தமிழர் திருநாளாம் வாழியவே ! 'இங்குள்ளோர்க் கொன்றுமினி இல்லே!’ எனுந்தீஞ்சொல் தங்காது ஒழிக! தமிழ்வாழ்க ! வாழ்க எனச் 90. சூழ்ந்து குரலெழுப்பச் சோறு சமைத்துவரத் தேனை நறுநெய்யை ஏலச் சிறுபொடியை ஆனமட்டும் துாவி ஆக்கிப் படைத்திடுவாய் ! கூப்பிடு வாழ்வோர் அனேவரையும் கூப்பிடடி! காப்பெதற்கு ? கார்தந்த செல்வும் விளைபொருள்கள் ! 9.5 சாப்பாட்டைத் தேக்காதே 1 சண்டை அதன் விளைவாம் ! பங்காக்கி உண்போம் ! பசியேது பின்நாட்டில் ? கொண்டுவா யாழை! குழந்தைகளைப் பாடவிடு! பண்டைத் தமிழ்வீரம் பாடட்டும்; கேட்போம் ! அரசர் மடிமேல் அரும்புலவர் செங்காவில் 100. ஓங்கி வளர்ந்த உயர்தமிழைப் பாடட்டும் ! ஊனுயிரை மக்கள் உணர்வை வளர்த்துவரும் தேனும் செழுந்தமிழைப் பாடட்டும் ; கேட்போம் ! உனது குரலினிமை உன்மக்கள் சொல்லில் கனிந்துளது ஆதலினல் கண்மணிகள் பாடட்டும் ! 105 வாழ்க இளம்பரிதி! வாழ்கவே தைப்பொங்கல் ! - பொங்கலோ பொங்கல் உளம்பொங்கும் இக்நாள்போல் எங்கும் தமிழ்மக்கள் எங்காளும் வாழ்க! - உயர்க பலதுறையில்! இன்பம் உயர்க! அயர்விலும் நாட்டின் உயர்வே கினேக ! 1 1 0. அறமும் திருவும் அறிவும் நிறைந்திடுக! சீர்பெற்றுக் கன்னித் தமிழ்வாழ்க என்றும் ! திருநாடு வாழ்க சிறந்து ! f