பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோப்பும் துரவும் விழிப்புலனுக் கெட்டாது . காப்புத் திரையிட்டு வைத்ததுபோல் மூடுபனி 55 மண்ணுக் கடியில் வளர்தி இருப்பதைப்போல் - கண்ணுக்கு நீண்டமட்டும் காணும் பனிப்புகையே ஊதை உடல்நடுங்கும் ! ஊரெல்லாம் தீக்காயும் ! கொம்புத் துளிர்கருகும் கொத்தெல்லாம் சீர்அரும்பும் ! செம்பொன் சிறுகிண்ணம் போல்யூக்கும் பூசணிப்பூ 60 ஆமை தலேபோல் அழகு சிறுகரயை - காமடைய விட்டுவைக்கும் கற்பறங்கி! வீட்டோரத் தோட்டத்து வேலியிலே தொங்கும் சுரைக்காய்கள் மீட்டாது மாட்டிவைத்த மெல்யாழாம் தென்னமரக் குட்டை நிறைந்த குளிர்அல்லித் தாமரைநீர் இது மட்டத்தில் வந்து மலர்பூக்க எத்தனிக்கும் ! செங்கெல் பழுத்ததுவே தீம்பலா முற்றியது ! கன்னலோ நாணற் கடல்போலப் பூத்ததுவாம் ! காட்டுப்பூ னேப்பல்லாம் கார்முல்லே நீளரும்பு வீட்டுக் கருகிருந்து மெல்லச் சிரித்தழைக்கும்! 70 யாழ்மீட்டும் தேன்.வண்டு!யார் அதைப்போல் பாடவல்லார்? வாட்டும் குளிர்காற்று வாய்க்கடையில் புண்செய்து காட்டும் பனிநாள் கடந்துவந்த தைக்கண்டோம் ! - தைகண்டோம் ! அன்பே தமிழ்கண்டோம்! இங்கன்மை வையத்துப் புத்தாண்டின் முன்னுள் வரக்கண்டோம்! 75 பொன்ைெளியை வான்கடல்மேல் பூசிச் சிரித்தகதிர் இன்னே வரக்கண்டோம்! இன்பம் வரக்கண்டோம் ! வாழ்க இளம்பரிதி ! புத்தாண்டு வாழியவே ! இல்லம் புதுக்கி எழில்புதுக்கி நீராடி அல்லொத்த கூந்தல் அழகைப் பெருக்க 80 நறுநெய் தடவுக! நன்ருக வாரிமுடி! புத்தாடை பூண்.நீ ! மலர்சூடு ! நம்வீட்டுச் சொத்தாம் குழந்தைகளைத் தூய்மைப் படுத்துகவே ! நேற்றறுத்த நெல்லரிசி நீள்தாழை முள்ளாம். திருத்திக் களைந்து செழுங்கரும்பின் கட்டிஇட்டுப் 85