பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவர் இருவர் சாயல் கண்டு "ஊரிலிருந் தின்று வருகி ருர்ப்போல் இருக்கு தென்ருர்; மகிழ்ச்சியில் தலையசைத்தேன்! சின்னஞ் சிறுவர் உருவம் இன்று சித்திரத்தின் எழிலாம் ! என்னைப் பெற்ருர் சுற்றம் நேசர் எனக்குத் தந்தார் திகைப்பை ! புதுமை காணக் கும்பல் கூடும் பொடியர் களைப்போல எதிரில் வாழ்நர், அண்டை வீட்டார் என்னேக்கா ணச்சூழ்ந்தார் ! அடுக்க டுக்காய்க் கேள்வி கேட்டே அரித்தெடுத்தார் என்னே! விடையிறுத்தேன்; வாய்பிளந்தே * விந்தை! விந்தை' என்ருர்! கரம்பு வெளியில் பசுமை கண்டேன் ! காளை இன்று கிழவன் ! மரம டர்ந்த தோப்புக் குடிசை வானத் தாவுமாடம் ஓடி யாடிக் குதித்த இடத்தின் உணர்வு ஊறிற் றென்னில் ! ஒடி யாடிக் குதிக்க இன்று ஒப்புவரோ நாட்டார் ? இருபஃ தாண்டு முன்னர் நாங்கள் இணைந்து சென்று காதல் பெருகப் பேசி நின்ற ஓடை பேசு தின்னும் என் முன் ! 143 10 1 1 I 2