பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்களுர் உடைத்திடும் கரையைத் தெற்கே உருண்டோடும் செஞ்சி ஆறு ; மடையினில் நாரை தூங்கி வழிபார்க்கும் சேலுக் காக; குடையென மாவி ரிந்து குளிர்நிழல் கொடுக்கும் ; வீரர் படையணி போல வாய்க்கால் இருகரை பனைகள் கிற்கும் ! குட்டையும் குட்டை பூத்த குளிர்அல்லிப் பூவும் கண்கள் எட்டிய மட்டும் தோன்றும் ; இடையிடை கொடிக்கால், வாழை எட்டிப்பார்த் தழைக்கும் நம்மை ; இருவிழி விருந்து காற்றுப் பட்டு,நெல் அலேயைப் போலப் படிந்தெழுந் தாடுங் கூத்தே ! கொண்டலே முட்டு கின்ற கோபுரம் இரண்டு தாங்கிப் பண்டையர் கலேயை, வாழ்வைப் பண்பட்ட உளத்தைக் காண உண்டொரு கோவில் எங்கள் ஊருக்கு நடுவில் ; பாசி - கொண்டநீர்க் குளம்ரீ ராழி குறைவிலா இன்ப ஊற்றே !