பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாட்டைத் தேய்த்துக் குளிப்பாட்டி மலர்குளம் அதிர விளையாடி வீட்டை நோக்கி நீர்ஒழுக விடைபோல் பையன் வருகையிலே கோட்டைப் பொன்னே வார்த்தெடுத்த குறுநகைச் சிறுமியர் உடலெல்லாம் ஒட்டை ஓட்டை எனக்கூவி ஒடி மறைவார் சிற்றுாரில் 1 ஒருவர் அறிந்தால் ஊரறியும் ; ஒற்றுமை ஒழுக்கம் அவரணிகள் ; பெருமை இல்லே , வீணுகப் பேசும் வழக்கம் அவர்க்கில்லை ; எருமை கறந்த பால் தயிர்மோர் எவர்க்கும் பொதுவாம் என எண்ணி வருவார் போவார் யாவர்க்கும் வழங்கல் ஒன்றே அவரறிவார் ; பயிரின் பசுமை, குயிலினிமை பாட்டுப் பாட நமைத்துண்டும் ! உயிரைக் கொல்லும் பொறிகமனவ் வூரில் இல்லை ! உடலெல்லாம் வயிரம் ஏறித் தசைதிரண்டு மாநிலம் காக்குத் தோளுடையார் உயிருள வரையும் ஆண்டான்சொல் உச்சியி லேற்கப் பிறந்தவரோ ?