பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றரர் சேவல் கதிர்மீன் மணிகாட்டும் ; செந்தா மரைப்பூ வெறியூட்டும் ; நாவல் நிறத்துக் கருவண்டு நல்லிசை எழுப்பும் மதுவுண்டு ; தாவி அலேந்து பசுமூங்கில் தமிழிசை பாடும் சிற்றுாரில் காவல் கட்டுப் பாடில்லே ; தாழை யருகே சிறுவிடும், தனித்தனி யாகக் கல்விடும், வாழைத் தோப்பும், மாங்தோப்பும், வளேந்த சந்தின் கோடியிலே மேழி மக்கள் உயிருண்டு மிளிரும் பண்ணே வீடொன்றும், ஏழை முத்து மாரியம்மன் இடிந்த கோவிலு மங்குண்டு ! மண்குடம் இடையில் உடல்சாய்க்க வலக்கை வீசி ஊர்வம்பைப் பெண்கள் பேசி நடக்கையிலே பிதுங்கிய மார்விழி உயிர்கொல்லும் ; கண்ணும் நாட்டில் சிற்றுரே கவலே போக்கும் நன்மருந்து ; உண்ண உணவு இல்லையெனில் உடையும் அணியும் என்செய்யும்?