பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமரம் சித்திரைத் திங்கள் கண்டு சிரித்தனே தளிர்த்து ; நீண்ட கொத்துசேர் பூநாற் றத்தால் கூவினய் ; இலவம் பஞ்சு மெத்தையில் துயில்வார் போல வண்டினம் துரங்கும் மெல்ல ; தத்தைகள் இணைந்து பச்சைத் தழை ஊசல் ஆடும் உன்னில் ! கலே நிறை உள்ளம் போல விரிந்தனே ; நிமிர்ந்தாய் ; காய்கள் குலைகுலை யாகக் கொண்டு குனிந்தனே ; கொடுத்தாய் ; மாவே ! இலேசெறி உன்றன் நீழல் இருந்திடாக் குறையா லன்ருே மலேப்புறம் சென்று கோடை வெப்பத்தைக் கழிக்கின் ருர்கள் !

  • சாற்றினைச் சுவைத்துச் சப்பிக் குப்பையில் தள்ளி விட்டார் ; மாற்றலர் மதியாச் செய்கை உணர்ந்திட வளர்ந்தாய் ; உன்னை ப் போற்றுதல் செய்கின் ருர்கள் ; புகழுக்கோர் அளவே இல்லே ; ஏற்றமோ மக்கள் செய்கை ?? என்று சற்றுக் கேளேன் !

&