பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுப்பூ தோப்புக்கள் துரவு சுற்றி என்மனம் போன போக்கே காப்பின்றி நடந்தேன்; ஏதோ காலினில் தைக்கக் கண்டேன்; வேப்பனின் நிழலில் குந்திக் களேந்தனன் வேரல் முள்ளே; தோப்பிடைப் புதர்வாழ் காட்டுப் பூமணம் தொட்ட தென்னே! செம்மையில் சிறிது நீலம் கலந்துகண் கவரு மின்ப அம்மலர் போல வாழ்வில் அதற்குமுன் கண்ட தில்லை; கம்மென வீசும் காற்றம் கண்டிட மெளவல் காணும்; நம்மவர் சொல்லால் அப்பூ விளித்தென நவிலும்; சொல்வேன்:

அழகினில் குறைந்தா போனேன் ? அருங்கடி யிலேயோ ? என்னில் ஒழுகிடும் தேன்.க சப்போ ? ஒருகட்டு நாற்ற மில்லா இழிமலர் குடும் பெண்கள் ஏனென்ன வெறுக்கின் ருர்கள் ? புழிச்சுதல் இன்றி மக்கள் கொடுமையாய்ப் பார்ப்ப தேனே ?