பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடிய மலர் மண்ணிலே பருவ முற்ற மக்களின் முகத்தைப் போலக் கண்களேக் கவர்ந்து, தோட்டச் செடிக்கெலாம் களையைத் தந்து, விண்ணினே நோக்கித் தென்றல் வீச்சினில் ஆடு கின்ற வண்ணமா மலரே ! உன்றன் வாழ்வினில் ஒன்று கண்டேன். தேன்பெற வண்டுக் கூட்டம் மணம்வரும் திசையை நோக்கி, 'நான்முன்னே ? தோன் முன்னே என்றுகள் ளரிரவெ ழுந்த வானத்தில் வட்ட மிட்டுக் காதலே இசையால் மீட்டும் ; தேன்சுவை யுண்ணும் ; உன்னில் தேக்கிடும் காதல் வெள்ளம் ! உருவினில் ஊறி வந்த - ஒளியெலாம் ஒருகொ டிக்குள் மருவிய வண்டால் உன்றன் முகத்தினில் வழிந்து பாயும் ; பெருமையில் ஒருநாள் வாழ்ந்தாய் ; பிரிவினை யுண்ர்ந்தாய் ; பின்னர் வருமந்தச் சுரும்ப ரென்று வழிபார்த்தாய்; அந்தோ பேதை !