பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தி அழகு இடைச் சலசலப்பில் - அழகு ஒலிக்குது இன்னிசையாய் ! - அதில் ஆடுஞ்செவ் வல்லிமலர் - அழகை அள்ளி இறைக்கு தடி ! கோதி உடல்கழுவிப் - பலநிறக் குருவி குளிக்கையிலே - அழகின் போதை தலைக்கேற - உடலுள் புகுந்ததோர் புத்துணர்வு ! வான முகட்டி லெல்லாம் - பரிதி வளர்த்திடு தியழகில் - உயர் ஞானம் பிறக்கு தடி ! - மனத்தில் நானற்றுப் போகு தடி ! மேற்றிசை வான மெல்லாம் - அழகு விதவித மாகு தடி ! - பெருங் காற்ருடி போற்சுழன்று -அழகு கண்ணேக் கவரு தடி ! அந்தி மயக்கினிலே - அழகு அறிவுப் பெருஞ்சுடரை - என் புந்தியில் மூட்டு தடி ! - மனத்தில் புதுமலர்த் தேன்பெருக் கே !