பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலவே சொல் ! சொந்தகா டுனக்குண்டோ வெண்ணிலாவே ? - அது சுதந்தர நாடோசொல் வெண்ணிலாவே ? இந்தநாள் அடிமைவாழ்வில் வெண்ணிலாவே 1 - நீ * இருக்கமனம் சகிப்பாயோ வெண்ணிலாவே ? 1. உப்புக் கடல்பிறந்த வெண்ணிலாவே 1 - உனக்(கு) உண்மைத் தந்தைதாயார்சொல் வெண்ணிலாவே ? எப்புவியும் உன்வரவை வெண்ணிலாவே ! - மக்கள் ஏன்விரும்பு கின்ருர்சொல் வெண்ணிலாவே ? 3 அலேகள் வெருண்டோடி வெண்ணிலாவே 1 - கரை அழிந்திட மோதுவதேன் வெண்ணிலாவே ? கலைஞன் உனதொளியில் வெண்ணிலாவே ! - இன்பக் கற்பனையில் நீந்துவதேன் வெண்ணிலாவே ? 3. உரிமை வழிதடுக்க வெண்ணிலாவே 1 - வானில் ஓடிவரும் மேகங்களே வெண்ணிலாவே ! எரிகொண்டு தாக்குவையோ வெண்ணிலாவே ? - அன்றி இணங்கிப் பணிவாயோ வெண்ணிலாவே ? - 4. கன்னியர் முகமெலாம் வெண்ணிலாவே 1 - நீ கவர்ந்த முறையாதோ வெண்ணிலாவே ? அன்னவர் உடல்கரிய வெண்ணிலாவே 1 - நீ அனற்சுடர் வீசுவதேன் வெண்ணிலாவே ? - 5 அங்கம் வளர்ந்தழிய வெண்ணிலாவே ! - நீ அல்லற்படும் காரணமென் வெண்ணிலாவே ? மங்கையர் மனம்நொந்து வெண்ணிலாவே 1 - உனக்கு வழங்கிய சாபமோசொல் வெண்ணிலாவே ? - 6.