பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகுப் பெண் சிலுசிலுக்கும் அதிகாலைக் கூண்டி னின்றே செவிக்கின்பம் அளித்திட்டாள் ; சிரித்தாள் பூவில்; விலக்கிள்ை இருள்திரையைக் கிழக்கு வானில் மெல்லங்கை புரிந்திட்டாள் ; பொற்றுள் சிந்தி அலேகடலில் மணற்பரப்பில் மெருகை ஏற்றி அள்ளுகின்ருள் உள்ளத்தை ; தாழை பூத்துக் கொலேவிழியைத் தூதனுப்பிச் சிரித்தாள் ; நெஞ்சைக் கொழும்புன்னேப் பல்காட்டிப் பறித்தே போனள் ! ஒடையிலே முழவார்த்தாள் ; வண்டாய்ப் பாடி உயர்கவிதை தந்திட்டாள் ; தென்ற லாகி ஆடையினேப் பிடித்திழுத்தாள் ; பனிப்புல் உச்சி ஆயிரமாம் முகம்காட்டிச் சிரித்தாள் ; தோப்புக் கோடியிலே இசைமிழற்றி விளித்தாள் ; சென்றேன் ; குளிர்பசுமை இலக்காட்டில் மறைந்தாள் ; பொய்கை ஆடுகின்ற தாமரையில் சிரிப்புக் காட்டி அருகிலென அழைத்திட்டாள் அழகுப் பெண்ணுள் ! இனிக்கின்ற தமிழ்ப்பாட்டில் இருந்தாள் ; மங்கை இதழ்நடுவே எனேயெட்டிப் பார்த்தாள் ; உள்ளக் கனிவேற்றும் இளங்குழவி நடையில் கண்ணில் கட்டுண்டு கிடந்திட்டாள் ; தமிழ வீரன் நுனிவேலில் நடம்புரிந்தாள் ; நடனப் பெண்கள் நொடிப்பினிலே தவழ்ந்திட்டாள் ; விளக்கில் கின்ருள் ; தனியான இடமவளுக்.கில்லை; எங்குக் தட்டுப்பட்டாள் ; பொருளில் ஒட்டி கின்ருள் ! 2