பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் முத்தம் தெருவினில் மண்ணில் குந்திச் சிற்றிலே அமைப்பேன் ; மெல்ல அருகினில் வருவான் ஒன்றும் அறியான்போல் நடிப்பான் ; கையில் தெருமண்ணே வாரி என்றன் தலேயினில் தெளிப்பான் ; இன்பம் பெருகிட வெளிக்காட் டாமல் சிக் சீச்சி 1 நாயே 1’ என்பேன். அறையொன்று கொடுப்பான் ; வீரிட்(டு) அலறுவேன்; அன்னே என்னேச் சிறைசெய்வாள் ; மீண்டும் அந்தப் பட்டியைத் தேடிச் செல்வேன் ; மறைந்திருந் தோடி வந்து வழியினில் சிரிப்பான் ; வேலி நறைமலர் எனக்குச் சூட்டி 'நாட்டியம் ஆடென் பானே ! கழுத்தினில் கயிற்ருல் தாலி கட்டுவான் ; உதிர்ந்த ஆலின் பழுப்பினில் மண்ணே யிட்டே 'உண்ணென்று பரிவாய்ச் சொல்வேன்; முழுச்சுவை உணவில் இல்லே " என்றெனே முனிவான் ; தேம்பி அழுதிட இதழில் முத்தம் அளித்தணேத் தடங்கச் செய்வான்!.