பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்காதே தோழா ! ஊரெல்லாம் தூங்கிற்று நான்துங்க வில்லை : உயர்காதல் கொண்டவர்கள் உறங்குவதும் உண்டோ ? கூரம்பு விழியுடையாள் ; சிறுவயதில் என்னில் - - குடிபுகுந்தாள் ; நானவளின் அடிமையாய்ப் போனேன் : பேரறியேன் ; ஊரறியேன் ; பேசியதும் இல்லே ! பிரிந்திருந்து வாழ்வதுவோ இனியாகா தென்னல் ! யாரென்று கேட்காதே ; முகம்பார்த்த தில்லே ! யாழ் இசையாள் ! என் உயிராள் ! சிரிக்காதே தோழா ! செடியினிலே பூப்பூக்கும் ; கண்பறிக்கும் , அந்தச் சிறுபூவைக் கொய்துமணம் நுகர்ந்திடுவார் மக்கள்; செடியூத்தல் இயற்கையடா செடிப்பூவின் நாற்றம் திசையிருந்து நுகருவதே அறிவுடையோர் செய்கை ! மடியிருத்திக் கொஞ்சுவதே காதலென்று சொன்னல், வண்டினங்கள் அவர்பேச்சைச் செவிமடுக்க வேண்டாம் கடிமணமும் பூவாழ்வும் ஒரேநாளின் எல்லே ! என்காதல் வேறுவகை ! சிரிக்காதே தோழா ! 2. அவள் நினைவில் உயிர்க்கின்றேன் ; வாழ்கின்றேன் ; ஒவ்வோர் அணுவினிலும் அவள் உருவைக் காண்கின்றேன் ; பொய்கைக் குவளே இதழ் அவளிதழே மலேச்சாரல் குன்றம் குளிர்தென்றல் அத்தனையும் அவளேத்தான் காட்டும் ! தவளைகளின் நீளொலியில் அவளேத்தான் கேட்பேன் ! தமிழ்க்கவிதை தமிழுற்று வேறென்ன வேண்டும் ? அவளின்றேல் நானில்லை; அழகில்லை ; கண்கள் அற்றவன்போல் ஆகின்றேன் ! சிரிக்காதே தோழா ! 3.