பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிப் பிரியேன் கார்கற்றித் திரிகின்ற மலேகண்டேன் ; உன்றன் கருங்கூந்தல் நான்கண்டேன் காந்தளுன்றன் கைகள் வேர்சுற்றிக கிடக்கின்ற பாறைவந்த மான்கள் வெருண்டோடும் பாம்பென்றே ! உன்மருட்சி கண்டேன் ! ஊர்சுற்றிக் கிளம்புகின்ற பெரும்புகையாம் மேகம் ; வானமோ தோல் உரிக்கும்; உன்குமுறல் கண்டேன் ! தேர்சுற்றி வந்தாலும் கிலேக்குவந்தே சேரும் ! செந்தமிழே கலங்காதே! இனிப்பிரியேன் நானே ! . 1 காடளந்து பூச்சூடிக் கனிவாரித் தந்து களிப்பூட்டும் சிற்ருறு தமிழ்க்கவிதை பாடும் ! பீடளந்து நின்றிருந்தேன் முல்லேயிலே ஒர்நாள்; பெண்மயிலே ! ஆட்டிடையன் சாய்கிளேயில் குங்தி நீடளந்து குழலிசைத்தான் ; நின்குரலே கேட்டேன் ! கிலேகுலைந்து போனனடி பசுகத்தக் கேட்டு ! நாடளக்கும் ஆறென்றும் கடல்வந்தே சேரும் ! நறுந்தொகையே கலங்காதே ! இனிப்பிரியேன் நானே ! 2 கோடெல்லாம் தழைபோர்த்துன் பசுமேனி காட்டும் ! குளம்குட்டை நெறிகின்ற பொன்னலேமேல் நாட்பூ ! ஏடெல்லாம் உன்முறுவல் எழுதாத பாட்டாம் ! எழில்விழியைக் கயல்காட்டும் வண்டுகளோ கூந்தல் 1 தோடெல்லாம் படபடக்கும் , தென்றலிலே கிள்ளே துணையோடு கொஞ்சுமொழி உன்வாய்ச்சொல் புட்கள் காடெல்லாம் திரிந்தாலும் கூடுவந்தே சேரும் ! கலித்தொகையே கலங்காதே ! இனிப்பிரியேன் நானே ! 3