பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் வாழாதே ! அதிகாலே வழிபார்த்தே இசைக்கும் புட்கள் ; அழகுசெயும் கீழ்வானம் பரிதிக் காக ; மதுதளும்பப் பேரரும்பு வண்டுக் கேங்கும் ; வளைமூங்கில் தலைநிமிரப் பசுமை தோயக் கதிர்வரவை எதிர்நோக்கும் , மடிசுரந்து கறவைகன்றை நினைத்துகத்தும், கவிதைப் பெண்ணே ! உதித்தோடும் நல்லெண்ண உருவைக் கண்டேன் ; உன்வருகை காணுதென் நெஞ்சம் ஏங்கும் ! பாதாளத் துள்ளிருந்து நண்டுக் கூட்டம் பார்த்தேங்கும் மழைவரவை குளம்வாழ் ஆம்பல் காதலினல் சிவப்பேறி மதியை நோக்கிக் கடுந்தவசு செய்திருக்கும் , சுருண்டெ ழுந்து மோதுதிரை யற்றதினுல் ஏங்கும் காணல் , முழுமதியோ ஒளிக்காக வானில் ஏங்கும்; மாதவிப்பூ சோலேவான் மலேகள் ஆறு வாடின என் கண்களுனேத் தேடித் தேடி ! மாரிபெய ஏங்குகின்ருர் உழவர் கூட்டம் , வளமைபெறத் தாவரங்கள் வானே நோக்கும் ; காரிருளே ஒளிசெய்யும் நிலவுக் காகக் காத்திருந்தே ஏங்குகின்ருர் சிறுவர்; நெஞ்சில் ஈரமின்றிப் பிரிந்துசென்ற தலைவர் காட்டை எதிர்நோக்கி ஏங்குகின்ருர் கன்னிப் பெண்கள் : கார்முகில்போல் பலவண்ணம் காட்டும் உன்றன் கவின்முகத்தைக் காணுதென் உயிர்வா ழாதே ! 4 - -