பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னேடி கோயம் ? பள்ளிக்குத் தோழருடன் கான்செல்லும் வழியில் பலவண்ணப் பூவிருந்துன் அழகுமுகம் காட்டிக கொள்ளைகொண்டாய் என்னுள்ளம் ! நீவாழி என்றும் ! குயிலுருவில் பசுங்காவில் குரல்காட்டி அழைத்தாய் ; பள்ளத்தில் சலசலக்கும் காட்டாருய் வந்தாய் ; பாடிஎனே மகிழ்வித்தாய் , யாப்புவகை சொன்னப் ; கள்நெகிழும் பூப்பறித்துன் தலைசூட்ட வந்தேன் கவின்முகத்தை முறுக்குகின்ருய் ! என்னேடி கோபம்? புள்ளிசைக்கும் விடிகால உனேத்தேடி வந்தேன் ; புதரிருந்து மணம்வீசிச் சிரித்துவர வேற்ருய் ; கள் வெறியை எனக்கேற்றும் உன்விழியால் கெஞ்சிக் 'கவலேஏன் ? உனே மறவேன் 1’ என்றதிது தான ? முள்நிறைந்த காடெல்லாம் ஆய்ந்தாய்ந்து தேடி உன் தலையில் முடிப்பதற்குப் பூப்பறித்து வந்தேன் ; கள்ளவிழிப் பெண்ணரசே ! என்கையை விலக்கிக் கண்ணெங்கோ திருப்புகின்ருய் ! என்னேடி கோபம் ? மாலேயிலே செவ்வானச் சுழல்பரிதி யாகி வாரிஎனச் சேர்த்தணேத்தாய் ; நான்கலங்கும் வேளே சாலேயிலே வீசுகின்ற தென்றற் காற் ருகித் தமிழ்த்தேனைப் பிழிந்துாட்டி இன்பத்தைச் சேர்த்தாய் ; மாலாகி விட்டனடி ! உன மறக்கப் போமோ ? வண்ணமலர் உனக்காக இதோபறித்து வந்தேன்; வேல்போன்ற விழியாளே ! நான் செய்த தென்ன ? . வெறுக்கின்ருய் என்பூவை ! என்னேடி கோபம் ?