பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 ஆற்ருேரம் மணற்பரப்பில் தனித்திருந்தேன் ; வந்தாய் ; அணேத்துகிலா முகங்காட்டி என் அறிவைப் பறித்தாய் ; காற்ருட வயல்வெளிக்கு கான்போகும் போது கைகோத்துப் பலபேசி எனத்தொடர்ந்து நின்ருய் ; மாற்றில்லாச் செம்பொன்னே 1 என் உயிரே அழகே ! மறந்துன்னே ஒருநாளும் தனித்திங்கு வாழேன் ! நாற்றஞ்சேர் பூப்பறித்துன் தலே சூட்ட வந்தேன் ; நான்மர்ட்டேன் என்கின்ருய் ! என்னேடி கோபம் ? 4