பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் மறவேன் சாலேயிலே எதிர்ப்பட்டாய் , நாணி நின்ருய் ; தழைமரத்தின் குளிர்மையுன் கண்ணில் கண்டேன்; மாலையிலே கடலோரம் மதகின் மீது வழிப்ர்ர்த்து மிகஏங்கி கின்றேன் வந்தாய் ; ச்ேலேயிலே முகம்பொத்து மகவைப் போலத் தேம்பியழு திட்டஎன அணைத்தாய்: பூக்கும் காலம்போல் நெஞ்சத்தில் இன்பம் சேர்த்தாய் ; - கவிப்பெண்ணே ! உனேவாழ்வில் மறவேன் என்றும் ! I இடம்கொடுத்தேன் என்மனத்தில் அவளும் நானும் இணைந்திருந்தோம் புருப்போல ; காய்ந்த பாலின் குடமுடைத்தாள் கிலே இல்லாள் ; உண்மைக் காதல் கொண்டார்க்கு வேறென்ன உலகில் வேண்டும் ? அடிபட்ட காயைப்போல் ஆனேன் ; நெஞ்சில் அலுப்புற்றேன் ; பித்தனப்போல் அலைந்தேன்; என்றன் மடிபிடித்து வற்ருத காதல் தந்து வாழ்வித்தாய் ! உனேஎன்றும் மறவேன் ; வாழி ! 2. உண்ணும்போ தென்னருகில் இருக்கின் ருய்நீ ; உறங்குகின்ற போதுடனே உறங்கு கின்ருய் ; கண்விழிக்கும் முன்னெழுந்து குயிலாய்ப் பாடிக் களிப்புளத்தில் சேர்க்கின்ருய் ; மறவேன் என்றும் ! பெண்ணரசே ! நீ இன்றேல் இன்பம் சொட்டும் பேச்சில்லே ; முச்சில்லை : கவிதை பாடும் எண்ணத்திற் கிடமில்லை ; பொருளைத் தேட இருட்டறையில் நுழைந்தவன்போல் தவிக்கின் றேனே ! 8