பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ இன்றேல்....! அந்தியிலே தொடுவானம் தீப்பற்றி வேகும் அழகெண்ணிக் கொண்டிருந்தேன்; கூடுவரும் புட்கள்; மந்தையிலே ஆனிரைகள் கிளப்பிவிட்ட துாசி மங்கிவரும் செவ்வொளியில்; மங்கிவரும் வானம் சிந்தவிட்ட ஒளிமணியாம் உடுக்கூட்டம் ! தம்மைத் தேடிவரு, நிலவைஎதிர் தேடிவரும் முன்னே : சிந்தையிலே உன் நினைவு தெவிட்டாத இன்பம் ! என்னுயிரே ! நீ இன்றேல் சீரழியும் வாழ்வே ! சிட்டினேகள் தோட்டத்து முருங்கையிலே கொஞ்சும்; சிறுகுஞ்சு தாய்நோக்கி வாய்திறந்து கத்தும் ; பட்டுடலே அழகுசெய்யும் ஒடையிலே காகம் ; இலவங்காய் வால்முளேத்துப் பறப்பதைப்போல் கிள்ளே நெட்டாகக் கல்விட்டுப் புறச்சுவரைத் தாவும் ; நீர் கிலேயில் அல்லிமலர் மலர்நிலவுக் கேங்கும் ; ஒட்டாதோ நமதுள்ளம்? நான்செய்த தென்ன ? என்னுயிரே! நீ இன்றேல் உருக்குலையும் வாழ்வே ! வந்துடலேத் தொட்டனேக்கும் மலர்க்காட்டுத் தென்றல்; உன்னணேப்பின் இன்பத்தை அதுசெய்வ துண்டோ ? சந்திருந்து குரலெழுப்பும் பூரிப்பில் ஆந்தை : தழைக்காட்டுப் பழமரத்தைத் தாவிவரும் வெளவால் : பொத்திருந்து வக்க வே இரைதேடப் போகும் , பொரிவண்டு மலர்க்காட்டில் புகுந்தெழுந்து பாடும்; புந்தியிலே உன்கினேவு வற்ருத இன்பம்! என்னுயிரே ! நீ இன்றேல் புரையோடும் வாழ்வே .