பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 լ உள்ளத்தில் அனைத்தென்னே இதழில் இன்பம் ஊட்டுகின்ற நினைவிருக்கும் அவளுக் கென்றும் ; கள்ளமிலா அவள்முகத்தின் எழிலில் என்றன் கற்பனையின் ஊற்றிருக்கும்; வாழ்க்கைத் துன்பப் பள்ளத்தில் வீழாது தடுத்தாட் கொள்ளும் பரிவிருக்கும் ; விழிப்பிருக்கும் ; கார்கா லத்து வெள்ளத்தைப் போலவள்மேல் வெறிகொண் டோடும் விருப்பத்தைத் தணிக்கவரு நாளெந் நாளோ? 4. உடையிழந்தோன் கையைப்போல் என்னைத் தாவும் உணர்விருக்கும் ; விழிகுளிரும் ; முல்லைத் தேனின் அடைஇதழ்கள் கசிந்தின்பம் சொட்டச் சொட்ட அத்தானென் றெனேயழைக்கும் ; மார்பு விம்மும் ; மடைகாக்கும் நாரையைப்போல் நான்வந் தேகும் வழிபார்க்கும் பொற்பிழம்பு ; ஆன லென்றன் உடைமனத்தின் புண்ணுற்றிக் கவிஞர் காட்டில் உயர்த்தியென வாழ்விக்கும் நாளெந் நாளோ ? 5,