பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானென் சொல்வேன் ? ஆள்காட்டி விரலாலே ஒவ்வோர் ஏட்டை அவள்புரட்டிக் கொண்டிருப்பாள் நூலெ டுத்து ; வாள்விழியோ என்ன ருகில் வந்து வந்து வட்டமிடும் ; நகைகாட்டும் ; கூர்ந்து நோக்கும் ! மீள்வதுண்டோ கருவண்டு மலரில் வீழ்ந்தால் ? மெல்விரலேச் சுவைத்திருக்கும் குழவிக் கென்றும் தாள்சோர்ந்து போவதுண்டோ ? கண்ணும் கண்ணும் தம்முள்ளே பேசுவதை நானென் சொல்வேன் ? f தெருவினிலே வாத்தைப்போல் அசைந்த சைந்து சிரிக்காமல் சிரித்தவளும் நடந்து போவாள் ; ஒருவருக்கும் தெரியாமல் அவள்மைக் கண்கள் ஓடிவரும் அன்போடு ; வேறு யார்க்கும் புரியாத வகையினிலே பேசும் ; சற்றுப் போய்த்திரும்பி மற்றென்று சொல்லும்; நெஞ்சில் உருவேறிப் போனதடா அந்தக் கண்கட்(கு) உவமையுண்டோ? பேசுவதை நானென் சொல்வேன்? 2 தாயோடு வீட்டினிலே தட்டிக் கப்பால் தன்னுருவை மறைத்திருப்பாள் ; தட்டிச் சந்தில் பாய்ந்துவரும் அவள்கண்கள்; கொஞ்சிக் கொஞ்சிப் பலபேசும்; பரிகசிக்கும்; நானென் சொல்வேன்? காய்கின்ற முழுநிலவும், தென்றற் காற்றும், கடல்தொலைவில் எழுப்புகின்ற இசையும் அந்த மாயவிழிக்கு ஈடாமோ ? என்னே ஊக்கி - வாழ்விக்கும் விழிப்பேச்சை நானென் சொல்வேன் ? 3