பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னியின் கனவு வானத் தழகிைெளி - எனது வட்ட முகத்திலென்பார் நானதைக் கேட்டவுடன் - சிறிது காணித் தலைகுனிவேன். செவ்வரி பாயுதென்பார் - எனது சேல்விழி துள்ளுதென்பார் ஒவ்வோர் உறுப்பினுக்கும் - பலப்பல உவமை கூறிடுவார். என்னைப் பிடித்திழுப்பார் - விடுவிடு’ என்று நான் பொய்யுரைப்பேன் ! கன்னல் மொழிந்திடுவார் - குசுகுசு’ காவியஞ் சொல்லிடுவார். என்சொல் மதித்திடுவார் - சோர்வில் என்னுயிர் காத்திடுவார். - - முன்னரே நான்கடப்பேன் - காதல்பெற முற்படும் வாலிபன் போல். வீட்டு அரசாட்சி - உனது விருப்பம் என்றுரைப்பார் பாட்டுக்கள் பாடென்பார் - நீர் பாவம் பிடியுமென்பேன்.