பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வீட்டினுள் இருக்க உள்ளம் விட்டிடா தவளே ஈர்க்கும் ; கேட்டிடு தெருவோ சையில் கேள்வனின் குரலேக் கேட்பாள்; ஒட்டமும் நடையு மாக . உள்ளிருந் தோடி வந்து பாட்டையை எட்டிப் பார்ப்பாள்: சிரித்திடும் பழித்துப் பாட்டை ! வாயிலில் கின்று நின்று வழிபார்ப்பாள் தலையைச் சாய்த்து; சாயலில் கணவன் ஒத்தார் சார்ந்திடத் தொலைவில் கண்டு வேயிரு தோளு யர்த்தி விம்முவாள்; அவள்மைக் கண்ணுே நோய்கொண்டு பொருளொவ் வொன்றும் நுழைந்(து) அவர் எங்கே ? என்னும் ! ஆண்களே இப்ப டித்தான் அலுவலில் சென்ருல் தாங்கள் வேண்டிய பொருள்கி டைத்த பின்னரே மீள்வார் வீட்டை ! ஈண்டிவர் வருகைக் காக ஏங்கிடு உயிரை ஏனே காண்டிடல் இல்லே என்பாள் கதவினப் பற்றிச் சாய்ந்தே !