பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o ᏝᏝ) ö6ᏧᎢ எழுதுகோல் எடுத்துக் கையால் சுவடியின் ஏட்டைத் தள்ளி எழுதுவாள் மேதை போல; ஏதேதோ முணுமு னுப்பாள் ; மெழுகுவாள் எச்சில் துப்பி; மேலாடை இழுத்துச் சுற்றி விழுந்தடி பணிவாள்; தாய்போல் வேலேகள் செய்வாள் கிள்ளே ! ஆடையும் அணியும் கேட்பாள்; அணிந்தபின் நடந்து பார்ப்பிாள்; சாடைகள் செய்வாள்; பாட்டி சாயல்போல் நடந்து போவாள்; ஏடவிழ் பூவைப் போல இன்னகை புரிவாள்; பெற்ருேர் வாடிய முகத்தை மாற்றும் மருந்தவள் பெற்ற தெங்கோ ? சிற்றிலே அமைத்து மண்ணில் சிறுசோறு சமைப்பாள்; அந்தச் சிற்றிலேச் சிதைக்கக் காணில் சீறுவாள்; என்னேக் கூவிப் பற்றுடன் உண்ணச் சொல்வாள் ; பாட்டுகள் பாடிப் பாடிப் பெற்றவள் போலப் பொம்மை பிள்ளேதா லாட்டு வாளே !