பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 "பைத்தியம் பைத்தியம்: பைத்தியம்! என்மகன் இவன்நோய் தீர்ந்தால் என்னுயிர் நிலைக்கும் படித்தவன்! பட்டம் பெற்றவன் அங்தோ! கொடிக்கிவன் ஒருவனே! குறையைத் தீர்ப்பீர்” என்று மருத்துவர் இருகை பிடித்தார் ஒன்றும் இல்லா இடக்கை காதில் ஒற்றி ஒற்றிக் குரலை உயர்த்தி :ஈடக் ஈடக் ஈடக் டக்கென’’ பைத்தியம் சிரித்துப் பாட லானான் பைத்தியம் பார்ப்பவர் உளங்கவர் அழகன்! பட்ட தாரி பன்மொழிப் புலவன் பார்ப்போர் முன்னர்ப் பலமொழி பேசி 'ஈடக்” பாட்டை இயம்பி இயம்பி எழுந்து சிரிப்பான் இருவிழி துக்கி முறைப்பான், சிரிப்பான், முணறி அழுவான் தாளம் சேர்த்துத் "தைதை யென்றே - ஆடுவான்; பாடுவான்; அழுவான்; சிரிப்பான்! மருத்துவர் வந்த பைத்திய மகனைப் பரிவுடன் அழைத்தார்; பார்வையால் சிரித்தார்: பேசிப் பார்த்தார்; பின் புற அறைக்குக் கூட்டிப் போனார்; மருந்துகள் கொடுத்தார்; பைத்திய மகனைப் பலநாள் தன்னிடம் விட்டு வைக்க வேண்டும் என்றே கூட்டி வந்த தந்தைக்குக் கூறினார்! எத்தனை ஆண்டுகள் என்மகன் உம்மிடம் இருப்பினும் கலங்கேன்; என்மகன் பைத்தியம் ஒழிந்தால் போதும்; ஒரேஒரு மகனிவன்" என்று மருத்துவர் இருவிழி நோக்கி "தீருமா பைத்தியம்?:தீருமா' என்றே திரும்பத் திரும்பக் கெஞ்சிக் கேட்டார்! 25 30 35 40 45 50