பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப்பாட்டு இதுதான் மருத்துவம் "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ -குறள் உலகோர் ஏற்றும் உயர்ந்த பண்பு கலகலப் பான கனிந்த பேச்சு பலநூல் ஆய்ந்த பரந்த அறிவு நகைமுகம் ஒளிவிழி நரைமுடித் தூய்மை அனைத்தும் ஒருங்கே அமைந்த பெரியார் மருத்துவ மனையை மாண்புடன் கடத்தி மக்கட் பணியே வாழ்வென வாழ்ந்து வந்தார்; அவரை வாழ்த்தார் இல்லை! நோயைக் கேட்பார்; நோய்முதல் ஆய்வார்; ஏற்ற மருந்துடன் இன்சொல் சேர்ப்பார்; கைவளம் உடையோர் கையால் அள்ளிக் கடுகே தரினும் கடுநோய் பறக்கும்" என்று மக்கள் இன்றும் புகழ்வர்! தென்னை நிழற்ற புன்னை மணக்க சிறுசிறு பூச்செடி சிங்தை பறிக்க ஆற்றங் கரையின் அருகில் அமைந்த மருத்துவ மனைக்கு வந்தார் ஒருவர் மருத்துவர் வந்த மனிதனை அழைத்து செய்தி என்ன செப்புவீர் என்றார் வந்தவர் சொந்த மகனைக் காட்டி } {} 15 20