பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

需● மனை துறந்து வள மைபல வழங்குகின்ற செயல்துறந்து மனைவி மக்கள் துணை துறந்து துயர்துறந்து தோள்கொடுத்து கிற்கின்ற சுற்றத் தோர்கள் இணைதுறந்து தனைஈன்ற தாயகத்தின் விடுதலையின் ஏற்றத் திற்கே தனைத்துறந்து கலம்விட்டோன்; செக்கிழுத்தோன். சிதம்பரனார் - தமிழ்மே லோனே! 4 அடலேறு சிதம்பரனார் அவனன்றோ இந்நாளில் ஆன்றோர் போற்றும் உடலுயிரில் என்றென்றும் ஊறிப்போன தாயகத்தின் உயர்ந்த பிள்ளை! கடலிடையில் கலம்விட்டான்; கடுஞ்சிறையும் கசையடியும் கண்டான்; செக்கை நடமாடு மாட்டைப்போல் இழுத்திழுத்து கலிந்தான்; தாய் நாட்டிற் கென்றே! 5 முன்னாளில் தான்பிறந்த தாய்நாட்டின் கால்விலங்கை - - - முறிப்ப தற்கே தென்னாட்டுத் திலகராய்ச் சிதம்பரனார் வ. உ. சி - - திகழ்ந்தார்; அன்னோர் முன்பாட்டின் கல்விளைவே நாம்பெற்ற விடுதலையாம்! - மூத்தோன் வாழ்த்திப் பொன்போலக் காத்திடுவோம்; புதுப்பொலிவில் வாழ்ந்திடுவோம் புகழ்சேர்ப் போமே! 6 72? س~9-س-8