பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 காதலர்க் கொருநாள் கடித மெழுதி மாங்குயில் கூவும் மாமரக் காவிற்கு வருக வென்றாள்; வரவேற் றழுதாள்! திருமண வாழ்வு சிதைந்ததென் றுரைத்து மறக்கச் சொல்லி வணங்கிக் கெஞ்சினாள்! மணிப்பொறி எடுத்துன் மகன் கைக் கொடுத்தாள்! என்இத யம்போல் என்றும் ஒலிக்கும் காதற் பரிசிது கைக்கொள் என்றாள்! பிரிந்தனர் இருவரும் பேரிடி தலையில் விழுந்தவர் போல வீடுவந் தடைந்தனர் காதல் பரிசு கைமணிப் பொறியைக் கண்ணெனக் காத்தான் கடத்தினான் நாளை கைமணிப் பொறியும் களவு போனதுவே! களவு போன கைமணிப் பொறியைத் தேடினேன் தேடினேன்; பலநாள் தேடினேன் கண்டு பிடித்துக் கொண்டு கொடுத்தேன். அறிவைப் பெற்றான் அகமகிழ்வடைந்தான் இதுதான் மருத்துவம்! இதுதான் மருத்துவம்! மகனின் வாழ்வு வளம்பெற வேண்டில் காதலி இன்றும் கன்னிப் பெண்ணாய் உன்மகன் கினைத்தே உயிர்வாழ் கின்றாள் இருமல் ஈளை இல்லா தொழிந்தது திருமகள் போன்ற அருமகள் அவளை மணம்செய் என்றார் மருத்துவர் குணம்பெற்று மகனும் குடிசெய் தனனே! བ མ་སྲིང་(ཁྱེ། 85 90 95 1 00

  1. 05