பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் பாடம் வானை முட்டும் மாமலை உச்சி தேனடை தொங்கும்! தேனடை உடைத்த கோலின் வழியே குளிர்தேன் பாயும்! குரங்குக் குட்டிகள் குந்திக் குடிக்கும் வண்டுகள் பாடும் மான்வெருண் டோடும்! அருவி முழக்கம் அடர்ந்த சாரல் பூத்துக் குலுங்கிப் புதுமணம் பரப்பும்! மலையடி வார மாங்கர் ஒன்றில் வாழ்ந்து வந்தார் மலைக்குகைச் சாமி! காவி உடையும் கருமைச் சாந்தும் பாதக் குறடும் பாய்புலித் தோலும் பொன்பூண் இட்ட புதுமணி மாலையும் அணிந்தே ஆண்டுக் கொருமுறை ஒருநாள் மலைக்குகை விட்டு மாநகர் கோக்கி வந்து மக்கட்கு வழங்குவார் வாழ்த்தே அந்நாள் நன்னாள் அவ்வூர்த் திருநாள்! ஒழுக்கம் விளக்குவார் உயர் அறம் விளக்குவார் அடங்கா மனத்தை அடக்கும் இயல்பினை விளக்குவார் வேத விளக்கம் விளக்குவார்! வெண்ணிறு அளித்தே விலக்குவார் நோயை கன்னியர் தாய்மார் காளைகள் முதியோர் வங்தே அவரடி வணங்கித் தொழுவார்! கண்ணில் ஒற்றிக் கைதொழு திருப்பர்! குறைசொலக் கேட்பார்; குறையினை மாற்றும் மறைமொழி உரைப்பார் மலர்முகம் காட்டி கரகத் தொல்லை கணிபல விளக்கி 5 * 10 笼{) 25