பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மாநகர் மக்கள் மனக்கண் முன்னர் திரைப்படம் போலத் தெளிய விளக்குவார் ஒழுக்க உயர்வின் உரைபல கிகழ்த்துவார்! மலைக்குகைச் சாமி மற்ற நாளெலாம் கண்முன் தோன்றார் கடுந்தவம் இருப்பார்! மாநகர் மக்கள் வாயெலாம் அந்த மலைக்குகைச் சாமியை வாழ்கென வாழ்த்தும்! மலைப்படி ஏறி மலைக் குகை சென்று வணங்கும் மக்கள் கூட்டம் வரவரப் பெருகி மலையின் பெருமை வளர்ந்ததே! அவரிடம் பயின்ற அடிமலைச் சாமி காளை வயதினர்! கருஞ்சிகைத் தாடி கோல உருவினர்; குழைந்த சொல்லினர் மாங்கர் ஒவ்வொரு நாளும் வந்தே 'அறம்பல செய்மின் ஆண்டவன் கினைமின்! இறந்தால் கிடைப்பதோ இருபே ருலகம் ஒன்று மோட்சம் உயர்ந்தவர்க் கதுவே! நரகம் பிறிது நமக்கவை வேண்டாம்! அல்லது செய்வோர் அங்கே புகுவர் செக்கில் அடடா செந்தீ வாயில் அட்டைக் குழியில் அடுபாம்பிடையில் இன்னல் பட்டே இருப்பார் நரகில்!” என்று பலப்பல எடுத்து விளக்கிச் சென்று மனைதொறும் சிற்றுரை நிகழ்த்தி வருவார் மக்களின் மனமெலாம் மாற்றுவார்; மலைக்குகைச் சாமி மாண்பை விளக்குவார் திருக்குறள் விளக்குவார் செந்தமிழ் விளக்குவார் சிறு சிறு கதையால் சிரிப்பை ஊட்டித் தெய்வ வழியின் தெளிவு காட்டி அறவழி நடக்க அடிக்கடி உரைப்பார் மாநகர் மக்கள் மனம் இடம் கொண்ட அடிமலைச் சாமியின் அறிவுரை மதியாக் 3 G 35 40 5{j 55