பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X அக் காளில் இருந்தாரோ என்கின்ற அய்யம் அகத்திலெழும்; அவர்பேச்சோ என்காதில் கேட்கும்! எக்காளும் என்னருகில் ஏதேதோ பேசி இருப்பதைப்போல் கனாக்காண்பேன் கனவும் ஒரு கானல்! இளவயதில் தாயற்றுத் தத்தளித்த போழ்து யார்யாரோ எனைத்துக்கிச் சிரிப்பூட்டப் பார்த்தார்! தளதளத்த என்பாட்டி அம்மாயி' என்றன் தனிச்சொத்து கானவளின் தணியாத காதல்! உளத்தினிலே குடியேறிப் போன அவள்காட்சி உயிர்பிரியும் வேளையிலும் நான்மறக்க மாட்டேன்! வளர்த்த அவள் எனைப்பிரிந்தாள்! அவளன்புச் சாயல் மாறாத பெருங்கனவு கனவும் ஒரு கானல்! இளமைக் காலம் என் தந்தை பிரெஞ்சு அரசாங்க அலுவலர்; அவர் ஒற்றை மாட்டு வண்டியிலேயே தம் அலுவலுச்குச் செல் வார்; அடம்பிடித்து அவரோடு வண்டியிலே செல்வேன்; அவர் போகும்போதும் வரும்போதும் எனக்கு உறக்கம் வரும் வரை கதைகள் பல சொல்வார். அவரோர் திரு மா லன்பர். அவர் ஆண்டாள் திருப்பாவைப் பாடல் வரிகளில் ஒரு சிலவற்றை எனக்குச் சொல்லிக் கொடுத்த துண்டு. என் அன்னையின் மறைவுக்குப் பின் அய்ந்தாண்டுகள் கழித்து என் அன்னையின் நெருங்கிய உறவுப் பெண்ணை என் தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். என் சிற்றன்னை பெயர் செல்லம்மாள்,