பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் முதன்முதல் எழுத்தறிவிக்கும் சடங்கோடு ஒரு திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். நினைத்துப் பார்க்கின் அது ஒரு பசுமையான நிகழ்ச்சி. திண்ணைப் பள்ளிக் கூடம் போவதாகப் போக்குக் காட்டித் தெருக் கோடியில் உள்ள சிறு கொட்டகையில் ஒளிந்து கொன் வேன். ஆண்டுதோறும் காமனுக்கு விழா எடுப்பதற்காக ஊரார்கள் சிறு கொட்டகை கட்டி அதன் முன் போய்க் கரும்பு, வாழை முதலியன நட்டு நவதானியம் வித்தி வழி படுவார்கள். இன்றும் அந்நிகழ்ச்சிகள் சிற்றுார்க்ளில் நடைபெறுதலைக் காணலாம், அந்தக் கொட்டகையே என் திண்ணைப் பள்ளிக்குப் பதில் பலமுறை புகலிடம் தந்ததுண்டு. அதற்காக நான் எந்தத் தண்டனையும் அடைந்ததாக நினைவில்லை. திண்ணைப்பள்ளி ஆசிரியர் நான் தாயற்ற பிள்ளை என்பதற்காக என்னை மன்னித் திருக்கக் கூடும். தாயற்ற காரணத்தாலோ தந்தையின் சிறப்பாக என் பாட்டியின் அன்பாலோ நான் சிறு வயதில் விடாப்பிடிக் கண்டனாகவே இருந்தேன். என். சிற்றன்னை செல்லம்மாள் இன்னும் உயிர் வாழ்கிறார்கள். அவர்கள் நான் எந்தத் தவறு செய்தாலும் மறைத்து விடுவார்களே தவிர மனங் குமுற மாட்டார்கள். மாற்றாந் தாய்க்கு அவர்கள் ஒரு விதி விலக்கு. கல்வி நிலை அந்தநாள் அரசாண்ட பிரெஞ்சுக்காரர்கள் புதுவையை எட்டுக் கொம்யூன்களாகப் பிரித்திருந்தனர். ஒவ்வொரு கொம்யூனிலும் சென்ட்ரல் ஸ்கூல் (Ecole Central) ஒன்று நடத்தப்பட்டு வந்தது. அதில் தொடக்க முதல் இறுதி வரை தமிழும் பிரெஞ்சு மொழியுமே கற்பித்து வந்தார்கள். நான் உருண்டோடும் கல்லைப்போல் வில்லியனுார், பாகூர், புதுவை ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளில் மாறி