பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைதி மலைகள் முப்புறம்! மறிகடல் ஓர்பால்! குலைமுதிர் வாழை கொடிபடர் தென்னை செந்கெல் கரும்பு செழுங்கழை சோளம் இக்கல் வளனும் இயைந்த பேரூர் எங்கோ மூலையில் இருண்ட காட்டில் தங்கம் மண்ணில் மறைந்திருப் பதைப்போல் மலையின் சாரலில் வளர்ந்து வந்ததே! அந்த நாட்டு மக்கள் ஆமைகள்! வளத்தைப் பெருக்க வறுமையை ஒட்ட அறியும் அறிவே அறியா திருந்தனர்! ஏய்த்துப் பிழைக்கும் கரியர்கள் எங்கும் இருந்ததைப் போல இருந்தனர் அங்கும்! அவர்களில் வலியோன் சுவர்கள் எழுப்பிக் கோட்டை அமைத்துக் காட்டைத் திருத்தி நாட்டின் அரசன் நானென் றிருந்தான்! ஊமை மக்கள் உயர்அறிவு இல்லார் அடங்கி ஒடுங்கி அவன்வழி கின்றே உழைத்தனர்; அரசன் உண்ணக் கொடுத்தனர். கோட்டைச் செலவும் கொடிபடைச் செலவும் நாட்டில் அதிகம்! நலிந்தனர் மக்கள்! வரிமேல் வரியும் வளர்ந்ததே நாளும்! கரிகள் கொழுத்தன! காட்டில் வறுமை கிறைந்ததே ஆனால் அரசன் செலவோ குறைக்ததே இல்லை! கொடுங்கள்! கொடுங்கள்! பொன்னைக் கொடுங்கள்! பொன்னா லான பொருளைக் கொடுங்கள்! பொன்னைத் திருப்பிக் கொடுப்பேன் உண்மை கொடுப்பேன் உண்மை! 1 () 15 2 {} 25