பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

† : என்றே அரசன் எங்கும் சென்றே மக்கள் முன்னர் வாய்திறந் துர்ைத்தான்! அரசன் சொல்லில் அடக்கம் இருந்தது! மக்கள் வாழ்வில் வறுமை வளர்ந்தது! 'மழையும் இல்லை! வளர்பயிர் இல்லை! உழைத்தவர் பொருளை உண்டு திளைத்தோர் அரசன் தயவை அண்ட வேண்டிக் கொடுத்தனர் சிலபேர் குறிக்கோள் இன்றியா கொடுத்தனர் என்றே கூறினான் ஒருவன்! சநாட்டின் நிலைமை நன்கறி யாத மடையன்! மட்டி! மலைப்புற மிருந்தே வரும்பகை அறியான்! வாயாடி!' என்றே இடித்தே அவனை எல்லோரும் இகழ்ந்தனர்! 'எண்ணிப் பார்க்கும் இயல்பினன் அவனை மண்ணில் விட்டால் வருமே விழிப்பு! விழிப்பு வான்வரு விடிவெள்ளி யாகும்! விடிந்தால் இருளோ வெற்றிகொள் ளாது! பின்னும் இவனோ முன்னர்த் தேடிய குழந்தையைக் கொன்ற கொலையாளி' என்றனர்! 'சிறையே இவனைத் திருத்தும் சீரிடம்: என்றனர் சில்லோர் அரசன் எதிரில் ஊரை ஏய்த்தே உழைப்பை ஏய்த்தே உண்டு களிக்கும் உழையாக் கூட்டம் பாரை ஆளும் அரசின் பாவைகள் சிறைஇங் கில்லை; சிறையில் தள்ளித் • - திருத்த கினைத்தால் திருந்தான் இவனும் தலையை வெட்டித் தள்ளுதல் மேலாம்’ என்றனர்! அரசனும் அதுசரி' என்றான்; தலையை வெட்டும் தகுபொறி வாங்க அண்டை நாட்டிற் கனுப்பினான் ஆளை! பொறியை வாங்கப் போனவன் வந்து விலையைக் கூறினான்! விழித்தான் அரசன்! 30 35 车0 45 50 55 வீண்பொருள் செலவேன்? வெளிச்சிறை வைப்போம்! 60