பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

曾虏 வேறு கோட்டைப்பொன் எல்லாம் குளிர்கிலப் பட்டின்மேல் மாட்டிவைத்த தைப்போல் மயிற்றோகை-ஈட்டி முனைபோல் சிறுகொண்டை முள்பெற்ற கால்கள் பனைவேர் எனப்படு மே! வேறு அருகில் தோன்றும் அரண்மனை மணியும் அந்தி அந்தியென்று அலறிக் களைத்தது! மயிலும் பறந்தது; மயிலைத் தாவி மனமும் பறந்தது. மலைக்கா டெங்கும் குயிலைத் தாவும் குறவன் போலத் தேடித் தேடிச் சென்றான் பாண்டியன்! அங்கொரு பாறைமேல் தங்கி ஏரியில் மாமயில் ஆடிற்று; வளர்.எழில் ஆடிற்று! எப்படி யேனும் இந்த மயிலை . - மடக்கிப் பிடித்து மார்போ டனைத்து 10. அரண்மனைக் கெடுத்துப்போய் வளர்க்க 5 - நினைத்தான் பூனைபோல் புதரில் மறைந்து மறைந்து மயிலாடும் பாறை மறைவில் தங்கி பாய்ந்து பிடித்தான் படரும் மயிலை அய்யோ என்றொரு அரைல், மாமயில் 15 கையும் காலும் பெற்றதைக் கண்டான்; வீர நெஞ்சம் வெலவெலத் ததுவே மெய்யெலாம் நடுங்க மேலெலாம் வியர்க்க பொய்மயில் தமிழவேள் பொன்மயில் பிறைமதி என்பதுணர்ந்தே எரிசுட் டவன் போல் . 20 பொறுத்தருள் என்னைப் பொறுத்தருள் தவற்றை என்றுகை கூப்பினான் இளமன் னனுமே!