பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூய தமிழ் போல் வாழ்க! வான கிறம்போல் மறிகடல்போல் இருகண்கள் போன இடமெங்கும் புதுப்புனலாம்! அப்புணலை இட்டுச்செல் கால்வாய் இடைஇடையில் சேமையிலை பட்றிச் சிவிறியெனப் பார்ப்போர் மனங்குளிரத் தென்றற் சிறு காற்றைச் செடிகொடிகள் மேலெங்கும் அன்றலர்ந்த பூமணத்தை அண்டி வருவோர்க்கு மன்றல் புரியும் மணமக்கள் வீட்டார்போல் - சென்ற விடமெல்லாம் செய்துகொண்டே யிருக்கும்! வயலெல்லாம் செந்நெல்! வரப்பெல்லாம் நீள்தெங்கு! அயலெல்லாம் கணுக்கரும்பு! அங்குமிங்கு மாகக் கார்தேங்கி நிற்கும் கவின் சேர் மலர்க்கு ளங்கள்! ஏர்நடத்தும் பாட்டோ இருசெவிக்கு கல்விருந்தாம்! வான்முட்டும் கோபுரங்கள் வருவோர் வரவேற்கும் தேன்முட்டும் பூக்கள் திருவிழிக்கு கல்விருந்தாம்! அண்ணா மலையார் அமைத்துவைத்த பல்கலைகள் கண்ணுடையோர் ஆக்கும் கருவூலம்! இத்தனையும் காண்போர் மனங்கவரும் கவின்சேர் மணிமாட மாண்புடைய தில்லை வளமாகும்! அவ்வளத்தின் ஒளிசேர் பழங்குடியின் ஒப்பில்லாத் தோன்றல் அளித்தளித்த செங்கை அறவோனாம் சுந்தரத்தின் 1 0 குடிவிளங்க ஆன்ற குளம்விளங்க வந்த கெடியோனாம் திருச்செல்வன் சிதம்பரம் நெஞ்சள்ளும் பாவலர்கள் போற்றும் பரமக் குடிச்செல்வி காவல் திருவிளக்கை இராஜேஸ்வரிக் கண்ணைச்