பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ጳን சந்தான கிருஷ்ணன் தமிழ்மகளைப் பூங்கொடியை இந்தநாள் இல்லாளாய் ஏற்றான் பலர்வாழ்த்த! வானைத் தொடுகின்ற மாமலையின் உச்சியெலாம் கானக் குயில்பாடிக் கார்தவழ்ந்து கொண்டிருக்கும். மழைபடர்ந்த வானில் எழுந்து வருமதிபோல் கழைபடர்ந்த சாரல் சலசலக்கும் நீளருவி! மாமலையி லேபிறந்து மன்னர் மடிதவழ்ந்து பாமலைச் செஞ்சொற் பழம்புலவர் நாவளர்ந்த கன்னித் தமிழ்த்தாயின் காற்சிலம்பும் குண்டலமும் மின்னும் வளையும்கன் மேகலையும் செஞ்சொல்லும் நாற்கூடல் மாடல் நடுத்தெருவு யாங்கணுமே பாற்குடத்தில் தேன் கூட்டில் பல்லோர் பகிர்ந்தளிக்கும் மதுரைத் திருநகரில் வணிகர் பெருங்குடியில் புதுமைச் சுடர்வீசும் பொன்விளக்காம் கல்யாணி சுந்தரத்தின் செல்வனாம் சூரிய மூர்த்தியை இந்தநாள் மணமகனாய் இனிதேற்றாய் வாழியவே! 20 மணம்பெற்ற என்னருமை மணமக்காள் விேர் மணநாள்போல் என்றென்றும் வாழ்ந்திடுக கீடே! மனை கடத்தும் போது வரும்போகும் தொல்லைபல! நினைவினிலே உப்பை நினைப்பீர் சிறிதுப்பு மிக்கினும் அன்றிக் குறையினும் ஆன்ற சுவை கைப்பேறிப் போகும் கருத்தில்,இதைக்கொள்வீர்! உங்கள் பெயர்நிலைக்க ஒன்றிரண்டு தீஞ்சுவைச் செங்கரும்புப் பிள்ளைகளைத் திருநாட்டிற் கேஅளித்துச் சூழ்க பல்வளமும்! தூய தமிழேபோல் வாழ்க என்றென்றும் மகிழ்ந்து! 25 12.7-?20 發