பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது மகிழ்வில் வாழ்க செவ்வான் எழுபரிதி செல்லும் திசையெண்ணி அவ்வழியே கோக்கும் நெருஞ்சிபோல்-கொவ்வை இதழ்ப்பொன்னி என்றென்றும் கொண்டான் குறிப்பில் புதுமகிழ்வில் வாழ்க பொலிந்து வள்ளியம்மை என்னும் மலிநீர்ப்பூம் பொன்னியைக் கொள்ளும் குணத்தோய் பழனியப்ப!-வெள்ளம் உலகூட்டும் தன்மைபோல் உண்டிட்டு வாழும் கலந்த மனையறமே காண்! ஆன்ற குடிப்பிறந்த அன்பு மணமக்காள்! ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்-சான்றோர் பலர் புகழ் கன்மக்கள் காட்டிற் களித்தே உலகொத்து வாழ்க உயர்ந்து 28-6-'74 எனை வளர்த்த பொன்னி' எனக் கவிஞரால் கருதப்பட்ட பொன்னியின் ஆசிரியரும், கோலாலம்பூர் தமிழ் நேசன் ஆசிரியருமான திரு. முருகு. சுப்பிரமணியன் திருமகள் வள்ளி யம்மை என்னும் பொன்னிக்கு 1.7.74 இல் திருமணம் நடந்தபோது வாழ்த்திய வாழ்த் துப்பா! இதுவே 7-8-14 இல் இயற்கை எய்திய கவிஞரின் இறுதிப்பா! - .