பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில் (கலித்துறை) தேன்மி குந்திடு திருமலர் பூத்திடு செய்யின் கூன்மி குக்திடு குளிர்கிழல் ஆலிடைக் கூண்டின் கான்மி குந்திடக் கரைந்திடு காக்கைகள் கண்ட வானி டையெழு மரக்கிளை வளர்ந்தசெங் குயிலே! ஏனெ ழுந்துநீ இரவிடைப் பகலவன் எழாமுன் தேனெ ழுந்திடு செழுங்கவிப் பாவலர் பாட்டை வானெ ழுந்து வகையுளி - நீக்கியே வாயால் கானெ ழுந்துமே பாடுதல் கண்டனன்; களிப்பே' பெற்ற தாயினைக் கூண்டிடைக் கண்டிடு பேற்றை உற்ற னமெனும் பொய்மையில் மகிழ்ந்தனை உண்மைச் சுற்ற மாரெனக் காக்கைகள் கூவியே துரத்தக் கற்ற னையவ ரவரினம் காப்பதே கடனாம்!