பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

¶ ዕû தேன்சொட்டச் சொட்டஎன்றும் செந்தமிழ்க் கவிதை யாத்த நான்கண்ட கவிஞர் ஆசான் கமைவிட்டுப் பிரிந்தார்! என்றன் ஊன்சுட்டுத் தீய்ந்த தந்தோ! உளம்சுட்டுக் கொதிக்கு தந்தோ! வான்சொட்டும் தூறல் ஒக்கும் மக்களின் கண்ணிர் வெள்ளம்! . 4. பைந்தமிழ் வழிவக் தோரே! பாவேந்தர் பயிற்றத் தேர்ந்த செந்தமிழ் மாணவர்காள்! செல்வங்காள்! மன்னர் மன்ன! இந்தநாள் துணைபி ரிந்த எமதன்னாய் பழனி யம்மா! கொந்துளோம் பிரிவால்! நாமே - கோயினை மாற்று வோமே! 5 மனம்கொங்தே இங்குச் சூழ்ந்த மாணவத் தோழ ரேறே! இனம்கொந்த போழ்தி லெல்லாம் நான்கண்ட கவிஞர் என்றும் சினவேங்கை ஆன துண்டே! செந்தமிழ் வாழ்ந்த துண்டே! இனம்காப்போம்! தமிழைக் காப்போம்! - இதுவோம் வேலை யாமே!! 6 24-4-'64 பாரதிதாசனார் இல்லத்தில், அவர்தம் மாண வர்கள் ஆசிரியரைப் பாராட்டிய இரங்கல் நிகழ்ச்சியில் பாடியது.